Thursday 29 August 2013

பத்து வருடத்தில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

சமீபகாலமாக ஆன்லைன் தொழில், மல்டி லெவல் மார்கெட்டிங், என்று பல நூதன முறைகளில் ஏமாற்றும் வேலை நடந்து கொண்டிருக்கிறது! எத்தனை முறை அனுபவபட்டாலும் மக்களால் இந்த கவர்ச்சியை விட்டு வெளிவர முடியவில்லை!  நண்பர் ஒருவர் சொன்னார்! ஒரு லட்சம் கொடுத்தால் அடுத்த மாதம் 35 ஆயிரம் தருவார்களாம், அதற்கு அடுத்து 25 ஆயிரம், அடுத்து 20 ஆயிரம், கிட்டதட்ட ஒரு வருடத்தில் 3 மடங்கு நீங்கள் கொடுத்த பணம் ரிட்டர்ன்!


     சிலர் அம்மாதிரி சம்பாதித்திருக்கிறார்கள் என்றார்! ஆரம்பத்தில் பணம் கொடுப்பார்கள் மொத்தமாக ஒரு பெரிய தொகையை லவட்டிக் கொண்டு ஓடுவார்கள் என்றேன்! முதலில் அந்த அளவு வருமானத்திற்கு சாத்தியமா என்று யோசிக்கனும்! அப்படி சாத்தியம் என்றால் அது கள்ளநோட்டாக தான் இருக்கும்! பேராசைப் பட்டு பணத்தை கொடுத்துட்டு ”எதோ ஒரு” கனவு கண்டா வெளியே சொல்லமுடியாதுன்னு சொல்வாங்கள்ள அந்த மாதிரி இருக்கக்கூடாது!

       நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! நேர்மையான வழியிலேயே, பொறுமையாக பத்து வருடங்களில்! அதற்கு ஒவ்வொரு வருடமும் உங்களது முதலீடு இரட்டிபாக வேண்டும்! நீங்கள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் ஆனால் ஒவ்வொரு வருடமும் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகினால் பத்தே வருடங்களில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் துறையில் கவனமும், கொஞ்சம் அறிவும் இருத்தல் நலம்!



உங்களுடய முதலீடு பத்தாயிரம் ரூபாய் மட்டுமே!

10,000 உங்கள் முதலீடு
20,000 முதல் வருடம்
40,000 இரண்டாம் வருடம்
80,000 மூன்றாம் வருடம்
1,60,000 நான்காம் வருடம்
3,20,000 ஐந்தாம் வருடம்
6,40,000 ஆறாம் வருடம்
12,80,000 ஏழாம் வருடம்
25,60,000 எட்டாம் வருடம்
51,20,000 ஒன்பதாம் வருடம்
1,02,40,000 பத்தாம் வருடம்

ஒரு கோடியே இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பத்தாம் வருட இறுதியில் உங்கள் கையில்!

பத்தாயிரத்துக்கு நல்ல பங்காக பத்து வாங்கினால் அடுத்த வருடம் இருபதாயிரத்துக்கு இருபது வாங்கலாம்! கமாடிட்டியில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம்! பணம் இரட்டிப்பாக ஒரு வருட கால அவகாசம் இருப்பதால் பொறுமையாக நிதானமாக சரியான இடத்தில் வாங்கலாம்! இதை பகுதி நேரமாக அல்லது மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே செய்வதால் உங்களுடய வழக்கமான பணிகளுக்கு இடையூறு வராது!




         உங்கள் இல்லங்களுக்கு அருகில் இருக்கும் ஷேர் புரோக்கிங் அலுவலகத்தையே நாடலாம்! அல்லது என்னையும் ( 9865180570 ) தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம்! நேர்மையான வழியில் சம்பாதித்தால் நாட்டிற்கும் நல்லது, வீட்டிற்கும் நல்லது! 

**********************************************************************************

Monday 20 May 2013

ஆபத்து நிறைந்த டப்பா டிரேடிங்    

    அண்மையில் 2013-14 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பங்கு பரிவர்த்தனை வரி போல் கமாடிட்டி வர்த்தக பரிவர்த்தனை வரி விதிக்கப்பட்டது.


    இந்த வரியை தவிர்க்கும் பொருட்டு பல கமாடிட்டி வர்த்தக நிறுவனங்கள் சட்ட விரோரதமாக பங்குச் சந்தைக்கு வெளியே ( ஆஃப் மார்க்கெட் டிரான்ஸ்சாக்‌ஷன்ஸ்) வர்த்தகம் மேற்கொள்வதாக தகவல்..!
    இந்த முறையில் எம்.சி.எக்ஸ் போன்ற கமாடிட்டி எக்சேஞ்ச்களுக்கு கொடுக்க வேண்டிய தரகு கட்டணமும் தவிர்க்கப்படுவதால் பல கமாடிட்டி டிரேடிங் நிறுவனங்கள் டப்பா டிரேடிங்கில் ஈடுவதாக தகவல்.. 
           கமாடிட்டி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களும் விவரம் தெரிந்து அல்லது தெரியாமல் இந்த டப்பா டிரேடிங் முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் மூலம் தரகு கட்டணம் மற்றும் கமாடிட்டி பரிவர்த்தனை கட்டணத்தில் சிறிய தொகை மிச்சமாகக் கூடும். ஆனால், இதில் பெரிய ஆபத்து இருக்கிறது.
       இந்த டப்பா டிரேடிங் சட்ட விரோதம் என்பதால் இந்த வர்த்தகத்தில் நீங்கள் ஏமாற்றப்பட்டால் அல்லது நஷ்டம் ஏற்படுத்தப்பட்டால் இது குறித்து கமாடிட்டி பங்குச் சந்தை அல்லது இந்தியாவில் கமாடிட்டி வர்த்தகத்தை முறைப்படுத்தும் எஃப்.எம்.சி என்கிற ஃபார்வேட் மார்க்கெட்டிங்-ல் புகார் செய்ய முடியாது. அப்படி செய்தாலும் நடவடிக்கை எடுப்பது கடினம்.
 
          மேலும், டப்பா டிரேடிங் செய்பவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் கமாடிட்டி டிரேடிங் செய்யும் நிறுவனத்தில் இந்த டப்பா டிரேடிங் வர்த்தகம் நடக்கும்பட்சத்தில் உங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது, பெரும்பாலான வர்த்தகம் சந்தைக்கு வெளியே நடந்தால் வர்த்தக அளவு (வால்யூம்) குறைந்துவிடும்மேலும், டப்பா டிரேடிங் நடக்கும் கமாடிட்டி மீது நடவடிக்கை, அபராதம் போன்றவை விதிக்க வாய்ப்பு உள்ளது.
டப்பா டிரேடிங் தொடர்பான புகார்களை கீழ்க்கண்ட அமைப்புகளுக்கு தெரிவிக்கலாம்...!
Ministry of Consumer Affairs, Food and Public Distribution
Department of Consumer Affairs, Government of India,
Krishi Bhawan, New Delhi-110 001,
Website: www.fcamin.nic.in
If you notice any illegal futures market activity, please report to:
Forward Markets Commission, Everest, 3rd Floor, 100, Marine Drive, Mumbai 400 002,
Tel: 022-227 953 00, Fax: 022-2281 2086, Email: contact.fmc@nic.in
Multi Commodity Exchage of India - MCX
Corporate Office - Multi Commodity Exchange of India Ltd (MCX).
CTS No. 255, Exchange Square, Suren Road,
Andheri East, Mumbai – 400 093, India.
Tel: 022 6731 8888, 022 6649 4000
Fax: 022 6649 4151, Email: info@mcxindia.com, www.mcxindia.com
MCX-  Southern Region, Doshi Towers, First Floor, 1A & B No.:156, Periyar EVR Salai, Kilpauk,Chennai – 600 010, Tamil Nadu, India                                                                                               Tel.+91 044 4395 0881, Fax : +91 44 4395 0899